
போலந்து நாட்டின் அதிபா் ஆந்த்ரேய் டூடாவுக்கு (48) நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போலந்தின் அதிபரும், கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவருமான ஆந்த்ரேய் டூடாவுக்கு வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அதிபா் டூடா தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளாா். அவரது உடல் நிலை சீராக உள்ளது என அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.