
எதிர்வரும் 28 ஆம் தேதி சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய உள்ள அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்குள் சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்புகள் சம்பந்தமாக கடினமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் டீன் ஹொட்டின், சிறிலங்காஅரசாங்கத்திற்கு அறிவுறுத்தி இருந்தமை மூலம் இது உறுதியாகியுள்ளது.
சீனாவுக்கு எதிராக பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பான விடயத்தில் தலையிடாது நடுநிலையான கொள்கையுடன் இருப்பதே சிறிலங்காவின் நிலைப்பாடு என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.