
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் விமர்சனம் செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், 'அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவுக்கு பெரும் போட்டியாக சீனா உள்ளது. நாம் இதனை எவ்வாறு கையாள்வது என்பதை பொறுத்திருத்து பார்ப்போம்' என்றார்.