Home » சட்டம் & அரசியல் » இந்தியத் தூதர் - சம்பந்தன் கொழும்பில் சந்திப்பு!

இந்தியத் தூதர் - சம்பந்தன் கொழும்பில் சந்திப்பு!

கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமான இந்தியன் ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

👤 Sivasankaran29 Oct 2020 6:30 AM GMT
இந்தியத் தூதர் - சம்பந்தன் கொழும்பில் சந்திப்பு!
Share Post

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்தியத் தூதுவரின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமான இந்தியன் ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் சிறிலங்கா மற்றும் இந்திய இரு நாட்டு உறவுகள், சமகால அரசியல் நிலைவரங்கள், சிறிலங்கா இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விவகாரங்கள் உட்படப் பல தரப்பட்ட விடயங்கள் குறித்து இருவரும் பேசினர்.