
சிறிலங்காவுக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்திக்காமல் சென்றமை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் பொம்பியோ தனது சிறிலங்காவுக்கான வருகையில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் என்று ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வந்தன.
இதற்கு முன் சிறிலங்கா வந்திருந்த சீனத் தூதுக்குழு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்துச் சென்றது.
இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் சந்திக்காமல் சென்றிருப்பது அரச மட்டத்திலும்கூட விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
இதேவேளை, அரசமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அதேவேளையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.
இதன் காரணமாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ பிரதமரைச் சந்திக்காமல் சென்றிருக்கலாம் என்றும் அரசியல் மட்டத்தில் பேசப்படுகின்றது.