Home » சட்டம் & அரசியல் » சவேந்திர சில்வாவுக்கு எதிராக மூன்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிப்பு

சவேந்திர சில்வாவுக்கு எதிராக மூன்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிப்பு

முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் என்பதுடன் ஏனைய இருவர் சாதாரண அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.

👤 Sivasankaran1 Nov 2020 11:49 AM GMT
சவேந்திர சில்வாவுக்கு எதிராக மூன்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் சாட்சியமளிப்பு
Share Post

மூன்று முன்னாள் இராணுவ அதிகாரிகள் வழங்கிய சாட்சியங்களே இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க அரசாங்கம் பயண தடையை விதிக்க காரணம் என்பது அமெரிக்க அரசுச் செயலாளர் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் பின்னர் தெரியவந்துள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மூன்று பேர் அமெரிக்க அரசுத் துறையில் சத்தியப்பிரமாணக்கடிதங்களை வழங்கியுள்ளனர்.

இந்த மூன்று பேரில் ஒருவர் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் என்பதுடன் ஏனைய இருவர் சாதாரண அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மேஜர் ஜெனரல் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. தான் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இரகசிய கட்டளைகளை வெளியிடும் அதிகாரியாக கடமையாற்றியதாக முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் அமெரிக்க அரசுத் துறையிடம் கூறியுள்ளதாக உயர் மட்டப் பாதுகாப்பு தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்தச் சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.