Home » சட்டம் & அரசியல் » அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனுக்கு முதல் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனுக்கு முதல் வெற்றி

5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற, ஒரு வாக்கு கூட கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளார் டிரம்ப்.

👤 Sivasankaran4 Nov 2020 6:05 AM GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனுக்கு முதல் வெற்றி
Share Post

டிக்ஸ்வில்லி நாட்ச் நகரில்தான் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். டிக்ஸ்வில்லி நாட்ச் நகரின் மொத்த மக்கள்தொகை 12 தான் (2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி). அனைத்து வாக்குகளையும் அவர் பெற்றுள்ளார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை...

அதிலும் 5 பேர்தான் வாக்காளர்கள்! அந்த ஐந்து பேர் வாக்களித்ததில், ஐந்து பேருமே ஜோ பிடனுக்குதான் வாக்களித்துள்ளார்கள். ஆகவே, 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற, ஒரு வாக்கு கூட கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளார் டிரம்ப்.

மில்ஸ்பீல்டு நகரின் மக்கள் தொகை 21.அந்த 21 பேரில், 16 வாக்குகள் டிரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. அந்த தொகுதியில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.