Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராணுவ ஒத்துழைப்பு! தமரா குணநாயகம்

சிறிலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராணுவ ஒத்துழைப்பு! தமரா குணநாயகம்

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை கூறியுள்ளார்.

👤 Sivasankaran4 Nov 2020 6:09 AM GMT
சிறிலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராணுவ ஒத்துழைப்பு! தமரா குணநாயகம்
Share Post

சிறிலங்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்கனவே இராணுவ ஒத்துழைப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான சிறிலங்காவின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா இதனைச் சீனாவுக்கு எதிராக பயன்படுத்த தயாராகி வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சிறிலங்கா அரசாங்கம் அணிசேரா கொள்கை எனக் கூறிக்கொண்டு, இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையானவற்றை செய்து வருகிறது.

அணி சேரா கொள்கை என்பது ஏகாதிபத்தியவாத போர் தேவைகளை நிறைவேற்றுவதோ அல்லது நடு நிலையாக இருப்பதோ அல்ல. அதற்கு எதிராக செயற்படுவது.

அமெரிக்காவின் இந்தோ - பசுபிக் தந்திரோபாய வழிமுறைகளுக்கு வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி உதவதன் மூலம் அணி சேரா கொள்கை மாத்திரமல்ல, ஐக்கிய நாடுகளின் இணக்கப்பாடுகளும் மீறப்படுகிறது எனவும் தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.