Home » சட்டம் & அரசியல் » அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எங்கள் கொள்கை மாறாது - ஈரான்

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எங்கள் கொள்கை மாறாது - ஈரான்

அமெரிக்க ஜனாதிபதியாக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல” என்று தெரிவித்தார்.

👤 Sivasankaran5 Nov 2020 11:04 AM GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எங்கள் கொள்கை மாறாது - ஈரான்
Share Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வந்தார். ஒபாமா காலத்தில் கையெழுத்தான ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அவர் அறிவித்தார். அவர் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "அமெரிக்காவுடனான எங்கள் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்த தனிப்பட்ட மனிதரைச் சார்ந்தும் அது மாறாது. அமெரிக்க ஜனாதிபதியாக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல" என்று தெரிவித்தார்.