Home » சட்டம் & அரசியல் » நாம்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவோம்- ஜோ பிடன்

நாம்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவோம்- ஜோ பிடன்

ஜோ பிடன் 253 வாக்குகளையும், டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

👤 Sivasankaran6 Nov 2020 9:25 AM GMT
நாம்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவோம்- ஜோ பிடன்
Share Post

ஜோ பிடன் கூறுகையில், " வாக்கு எண்ணிக்கை முடியும் போது நானும், கமலா ஹாரிசும் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தம் உள்ள 538 தேர்தல்சபை வாக்குகளில் 270 வாக்குகளை பெற்றவர்தான், அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்த முடியும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விட்டது.

ஜோ பிடன் 253 வாக்குகளையும், டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவோம் என ஜனநாயகக் கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.