Home » சட்டம் & அரசியல் » அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ள அரச நிறுவனங்களுக்கு தடை

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ள அரச நிறுவனங்களுக்கு தடை

அரச நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.

👤 Sivasankaran7 Nov 2020 5:31 AM GMT
அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ள அரச நிறுவனங்களுக்கு தடை
Share Post

அரச நிறுவனங்கள் வெளிநாடுகளை தளமாக கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்றாக தடை செய்துள்ளார்.

கடந்த காலங்களில் எவ்வித ஆராய்வுகளும் இன்றி அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இப்படியான உடன்படிக்கைகளை செய்து கொண்டமையே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இயங்கும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரங்கள் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரச நிறுவனங்களுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.