Home » சட்டம் & அரசியல் » நான் முதல் பெண், கடைசி பெண் அல்ல: கமலா ஹாரிஸ்

நான் முதல் பெண், கடைசி பெண் அல்ல: கமலா ஹாரிஸ்

யாருக்கு வாக்களித்து இருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பேன்.

👤 Sivasankaran8 Nov 2020 7:07 AM GMT
நான் முதல் பெண், கடைசி பெண் அல்ல: கமலா ஹாரிஸ்
Share Post

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

"ஜனநாயகத்தைக் காப்பாற்றி, வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. பெருவாரியாக வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய மக்களுக்கு நன்றி. நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருக்கும் அளவில்லாத அன்பே எனது வெற்றிக்குக் காரணம். ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல அது ஒரு செயல். கணவர் உள்பட குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கும் நன்றி.

நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு வந்த தனது தாயை இந்த தருணத்தில்நினைவவு கூர்கிறேன். கனவுகள் சாத்தியமாவதற்கு எனது வெற்றியே இளம் தலைமுறையினருக்கு உதாரணம். யாருக்கு வாக்களித்து இருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பேன்.

துணை அதிபராகத் தேர்வாகியுள்ள முதல் பெண் நான். கடைசிப் பெண் அல்ல. இது துவக்கமே. ஒரு பெண்ணை துணை அதிபராகத் தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருக்கிறது. இனவெறியை அகற்றுவோம் என உறுதிப்படக் கூறுகிறேன்.: என்று அவர் பேசினர்.