Home » சட்டம் & அரசியல் » மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை நீக்கம்! இராணுவ தளபதி

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை நீக்கம்! இராணுவ தளபதி

நாளை அதிகாலை 5:00 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்

👤 Sivasankaran8 Nov 2020 7:38 AM GMT
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை நீக்கம்! இராணுவ தளபதி
Share Post

"மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை நீக்கப்படும்" என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

"நாளை அதிகாலை 5:00 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும். எனினும் சில காவல்நிலையப் பிரிவின் கீழுள்ள பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும்" என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 12 காவல்நிலையப் பிரிவுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்கள் சிலவற்றை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த இடங்களில் அதிக அளவிலான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.