Home » சட்டம் & அரசியல் » கொரோனாவின் தீவிரத்தை அரசாங்கம் மறைக்கின்றதா? ஜே.வி.பி

கொரோனாவின் தீவிரத்தை அரசாங்கம் மறைக்கின்றதா? ஜே.வி.பி

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் இது தீவிரமான ஓர் நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

👤 Sivasankaran9 Nov 2020 8:45 AM GMT
கொரோனாவின் தீவிரத்தை அரசாங்கம் மறைக்கின்றதா? ஜே.வி.பி
Share Post

கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலையின் தீவிரத்தை அரசாங்கம் மூடிமறைக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா அலையின் பாரதூரதன்மையை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை அல்லது அதனை மூடி மறைக்கின்றது என்றே கருத வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் மூவாயிரம் நோயாளிகள் பதிவாகியிருந்த போதிலும் கடந்த ஒரு மாத காலப் பகுதியில் பத்தாயிரம் நோயாளிகள் பதிவாகியிருந்தனர். சுமார் ஏழு மாதங்களில் மூவாயிரம் தொற்றாளிகள் பதிவானதுடன் ஒரு மாத காலப் பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் இது தீவிரமான ஓர் நிலைமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாம் அலையின் போது நோயாளிகள் குறிப்பிட்ட இடங்களிலிருந்து பதிவாகியிருந்தனர் என்ற போதிலும் இம்முறை அவ்வாறு இல்லாமல் பல்வேறு இடங்களிலும் நோயாளிகள் பதிவாகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.