Home » சட்டம் & அரசியல் » வெளிநாட்டுத் தூதுவர்களாக ஏழு பேரின் நியமனத்திற்கு அனுமதி

வெளிநாட்டுத் தூதுவர்களாக ஏழு பேரின் நியமனத்திற்கு அனுமதி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற குழு அறையில் உயர் பதவிகள் பற்றிய குழு இன்று கூடியது.

👤 Sivasankaran10 Nov 2020 7:26 AM GMT
வெளிநாட்டுத் தூதுவர்களாக ஏழு பேரின் நியமனத்திற்கு அனுமதி
Share Post

வெளிநாட்டுத் தூதுவர்களாக சேவையாற்ற சிறிலங்கா அரசாங்கத்தினால் பெயரிடப்பட்ட ஏழு புதிய தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு இன்று அனுமதி வழங்கியது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற குழு அறையில் உயர் பதவிகள் பற்றிய குழு இன்று கூடியது.

இதற்கமைய, அஹமட்.ஏ.ஜவாட் சவுதி அரேபியாவுக்கான சிறிலங்காத் தூதுவராகவும், அருனி ரணராஜா நெதர்லாந்துக்கான சிறிலங்காத் தூதுவராகவும், தர்ஷன பெரேரா சுவீடனுக்கான சிறிலங்காத் தூதுவராகவும், எம்.கே.பத்மநாதன் எகிப்துக்கான சிறிலங்காத் தூதுவராகவும் நியமிப்பதற்கான அனுமதி இதன்போது வழங்கப்பட்டது.

மேலும், எஸ்.டி.கே.சேமசிங்ஹ போலாந்துக்கான சிறிலங்காத் தூதுவராகவும், சி.ஈ.சமிந்த.ஐ.கொலன்னே தாய்லாந்துக்கான சிறிலங்காத் தூதுவராகவும், எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் கனடாவுக்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகராகவும் நியமிப்பதற்கான அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டது.

அமைச்சர்களான சமல் ராஜபஷ, நிமல் சிறிபால டி. சில்வா, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமேஷ் பதிரன, சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, விதுர விக்ரமநாயக்க, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.