Home » சட்டம் & அரசியல் » சிறிலங்கா, இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய நிலையில் அமைந்துள்ளது! ஜப்பான் அரசு

சிறிலங்கா, இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய நிலையில் அமைந்துள்ளது! ஜப்பான் அரசு

ஜப்பான் மற்றும் சிறிலங்கா ஆகியவை கடல் ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

👤 Sivasankaran11 Nov 2020 1:28 PM GMT
சிறிலங்கா, இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய நிலையில் அமைந்துள்ளது! ஜப்பான் அரசு
Share Post

சிறிலங்கா, இந்தியப் பெருங்கடலில் ஒரு மூலோபாய நிலையில் அமைந்துள்ளது என்று ஜப்பான் இன்று தெரிவித்துள்ளது.

இணையத்தின் வழியாக இன்று நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு மாநாட்டின் போது, உரையாற்றிய சிறிலங்காக்கான ஜப்பானின் தூதர் அகிரா சுகியாமா இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு-மேற்கு கடல் பாதைகளில் மூலோபாய நிலையில் அமைந்துள்ள சிறிலங்கா, ஜப்பானின் ஒரு முக்கிய பங்காளியாகும்.

இந்நிலையில் ஜப்பானின் புதிய பிரதமர் சுகா யோஷிஹைட்டின் தலைமையில், ஜப்பான் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்திய நிலைப்பாட்டை தொடர்கிறது என்று அவர் கூறினார்.

ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டமைப்பின் அடிப்படையில், ஜப்பான் மற்றும் சிறிலங்கா ஆகியவை கடல் ஒத்துழைப்பில் நிலையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

அத்துடன் துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனம் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, ஜப்பான் சிறிலங்காவில் தரமான உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் ஈடுபட்டுள்ளது என்றும் தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.