Home » சட்டம் & அரசியல் » தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது: ஜோ பைடன்

தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது: ஜோ பைடன்

குடியரசுக்கட்சியினர் எனது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்" என்றார் ஜோ பைடன்.

👤 Sivasankaran11 Nov 2020 1:54 PM GMT
தோல்வியை ஒப்புக் கொள்ள டிரம்ப் மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது: ஜோ பைடன்
Share Post

வெல்லிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ பைடன், டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என்றார்.

"டிரம்பின் நடவடிக்கை அதிபரின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது. நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்கிறார்கள். கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நான் நம்புகிறேன். "

"நடந்து விடும் என்ற பார்வையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நான் நினைக்கிறேன். அதிபர் டிரம்ப் அல்லது வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தரப்பு இதுவரை கூறி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு தற்போது எந்த வரை ஆதாரங்களும் இல்லை. குடியரசுக்கட்சியினர் எனது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்" என்றார் ஜோ பைடன்.