Home » சட்டம் & அரசியல் » குறைந்த பட்சம் பொருட்களின் விலையை குறைப்பதற்கும் அரசு தவறிவிட்டது! கரு ஜயசூரிய

குறைந்த பட்சம் பொருட்களின் விலையை குறைப்பதற்கும் அரசு தவறிவிட்டது! கரு ஜயசூரிய

20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதே அரசின் தேவையாக இருந்தது.

👤 Sivasankaran12 Nov 2020 1:18 PM GMT
குறைந்த பட்சம் பொருட்களின் விலையை குறைப்பதற்கும் அரசு தவறிவிட்டது! கரு ஜயசூரிய
Share Post

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய அரசை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் அரசுடன் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நின்றார்கள்.

அதனூடாக வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, மக்களின் ஒற்றுமையைப் பலிகொடுத்தேனும் அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதே அரசின் தேவையாக இருந்தது.

ஆனால், தற்போதுவரை குறைந்த பட்சம் பொருட்களின் விலைகளிலேனும் மட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அரசு தவறியிருக்கின்றது. நாங்கள் மீண்டும் கூறுகின்றோம். அரசமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது உண்மையில் ஒரு தற்கொலை முயற்சி." என்று அவர் தெரிவித்துள்ளார்.