Home » சட்டம் & அரசியல் » பிரான்சில் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு

பிரான்சில் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு

பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் டுவிட்டர் செய்தியில் இதை வெளியிட்டு உள்ளார்.

👤 Sivasankaran14 Nov 2020 3:34 PM GMT
பிரான்சில் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு
Share Post

பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் எனப் பிரான்ஸ் பிரதமர் அறிவித்து உள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் டுவிட்டர் செய்தியில் இதை வெளியிட்டு உள்ளார்.

"பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், தேசப் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிபருடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்து உள்ளோம்.

இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.