Home » சட்டம் & அரசியல் » டிரம்புக்கு ஏற்பட்ட நிலை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் ஏற்படும்! ஐக்கிய மக்கள் சக்தி

டிரம்புக்கு ஏற்பட்ட நிலை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் ஏற்படும்! ஐக்கிய மக்கள் சக்தி

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

👤 Sivasankaran14 Nov 2020 4:01 PM GMT
டிரம்புக்கு ஏற்பட்ட நிலை ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் ஏற்படும்! ஐக்கிய மக்கள் சக்தி
Share Post

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் ஆட்சியமைத்து ஒருவருடகாலம் பூர்த்தியாகும் தருணத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து நூறு நாட்களுக்குள் செய்த காரியங்களைக்கூட, இவர்கள் இதுவரையில் செய்யவில்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மத்தியில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் கூட, தாங்களும் அவரது வெற்றிக்கு காரணம் என்பதை கூறிக் கொள்ள விரும்பாமல் இருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.