Home » சட்டம் & அரசியல் » ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து டயனா கமகே நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து டயனா கமகே நீக்கம்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran15 Nov 2020 8:03 AM GMT
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து டயனா கமகே நீக்கம்
Share Post

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை உடனடியாக அழுலுக்கு வரும் வகையில் அந்த கட்சியில் இருந்து நீக்கச், சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு கடந்த வியாழக்கிழமை கூடிய போது இந்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை கட்சியினர், கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து டயனா கமகேவை கட்சியில் இருந்து நீக்க அவர் தீர்மானித்துள்ளார்.