Home » சட்டம் & அரசியல் » விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படக் கூடாதெனப் பிரித்தானியாவுக்கு இந்தியா அழுத்தம் !

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படக் கூடாதெனப் பிரித்தானியாவுக்கு இந்தியா அழுத்தம் !

தனது வாதங்களுக்கு ஆதாரங்களாக ஆவணங்களையும், மின்னணுப் பதிவுகளையும் கொடுத்திருக்கிறது.

👤 Sivasankaran15 Nov 2020 8:05 AM GMT
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படக் கூடாதெனப் பிரித்தானியாவுக்கு இந்தியா அழுத்தம் !
Share Post

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா இங்கிலாந்துடன் தகவல் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கிறது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைநீக்க வேண்டுகோள்களினைப் பரிசீலிக்கும் தீர்ப்பாயம் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக எடுத்த முடிவிவினையடுத்தே இந்தியா அத்தடை நீட்டிக்கப்படவேண்டும் என்கிற அழுத்தத்தினை இங்கிலாந்து மீது திணித்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையுட்பட உலகின் பல நாடுகளிலும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும், பல நடவடிக்கைகளில் அது ஈடுபட்டுவருவதாகவும் கூறியிருப்பதோடு தனது வாதங்களுக்கு ஆதாரங்களாக ஆவணங்களையும், மின்னணுப் பதிவுகளையும் கொடுத்திருக்கிறது.