Home » சட்டம் & அரசியல் » ரஷிய தடுப்பூசியை பெற பல நாடுகள் விருப்பம் - அதிபர் புதின்

ரஷிய தடுப்பூசியை பெற பல நாடுகள் விருப்பம் - அதிபர் புதின்

கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

👤 Sivasankaran16 Nov 2020 8:22 AM GMT
ரஷிய தடுப்பூசியை பெற பல நாடுகள் விருப்பம் - அதிபர் புதின்
Share Post

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாஸ்கோவில் இருந்தவாறு, வியட்னாம் நடத்திய கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசினார்.

அப்போது அவர் பல நாடுகள் ரஷியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெறவும், கூட்டாகத் தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா பரிசோதனை முறைகளை கூட்டாளிகளுக்கு இலவசமாக வழங்கி ஒத்துழைக்க ரஷியா தயாராக இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.