Home » சட்டம் & அரசியல் » ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சொன்ன எதையும் செய்யவில்லை கோட்டாபய: சம்பிக்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சொன்ன எதையும் செய்யவில்லை கோட்டாபய: சம்பிக்க

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இன்னும் நிறைவேற்றவில்லை.

👤 Sivasankaran16 Nov 2020 9:06 AM GMT
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சொன்ன எதையும் செய்யவில்லை கோட்டாபய: சம்பிக்க
Share Post

பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகும் நிலையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியமைத்து ஒருவருடம் பூர்த்தியாகிவிட்டது. ஆனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இன்னும் நிறைவேற்றவில்லை."

"தேசிய பாதுகாப்பு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டனர். மேலும் சுபீட்சமான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர். இதுவரையில் அதில் எதனையாவது செய்துள்ளார்களா?

"ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவோம்" என்று கூறினர்.

"ஆனால், பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய இலங்கையிலுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராகக்கூட இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைவர்கள் ஆளும் தரப்பினருடனும் தொடர்பில் இருக்கின்றமையே இதற்குக் காரணமாகும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.