Home » சட்டம் & அரசியல் » சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அதிகாரிகளே முடிவெடுப்பர்: ரம்புக்வெல

சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அதிகாரிகளே முடிவெடுப்பர்: ரம்புக்வெல

இது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை.

👤 Sivasankaran16 Nov 2020 9:09 AM GMT
சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அதிகாரிகளே முடிவெடுப்பர்: ரம்புக்வெல
Share Post

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை அமைச்சரவையால் எடுக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டுமா அடக்கம் செய்யவேண்டுமா என்பது குறித்த முடிவை சுகாதார அதிகாரிகளே எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை.

அமைச்சரவையில் இந்த விடயம் குறித்து பல தடவை ஆராயப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.