Home » சட்டம் & அரசியல் » தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிட்டேன் - டிரம்ப் டுவீட்

தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிட்டேன் - டிரம்ப் டுவீட்

அதிபர் டிரம்ப் 232 தேர்தல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

👤 Sivasankaran17 Nov 2020 3:07 PM GMT
தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிட்டேன் - டிரம்ப் டுவீட்
Share Post

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றதாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 232 தேர்தல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தபோதும் தனது தோல்வியை ஏற்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.

அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், 'தேர்தலில் நான் வெற்றிபெற்றுவிட்டேன்' (I won the Election) என தெரிவித்துள்ளார். ஆனால், டிரம்பின் பதிவை போலியான தகவல் என்று கூறும் வகையில் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், 'அதிகாரப்பூர்வ தகவல்கள் இந்த தேர்தல் முடிவுகளை வேறு விதமாக கூறுகிறது' (Multiple sources called this election differently) என டுவிட்டர் நிறுவனம் பதிவு செய்துள்ளது.