Home » சட்டம் & அரசியல் » வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் துப்புரவு பணி - படையினர் குவிப்பு!

வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் துப்புரவு பணி - படையினர் குவிப்பு!

வன்னிவிளாங்குளம் வீதி முழுவதும் காவல்துறையினர் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

👤 Sivasankaran17 Nov 2020 3:16 PM GMT
வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் துப்புரவு பணி - படையினர் குவிப்பு!
Share Post

முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில், துப்புரவு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சூழ படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த துப்பரவுப் பணியினை முன்னெடுத்தனர்.

இதனால் வன்னிவிளாங்குளம் வீதி முழுவதும் காவல்துறையினர் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வீதியால் செல்பவர்களை விசாரிக்கும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.