Home » சட்டம் & அரசியல் » கொழும்பு மீண்டும் முடக்குவது குறித்து அரசாங்கம் முடிவு செய்யவில்லை

கொழும்பு மீண்டும் முடக்குவது குறித்து அரசாங்கம் முடிவு செய்யவில்லை

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

👤 Sivasankaran18 Nov 2020 5:21 AM GMT
கொழும்பு மீண்டும் முடக்குவது குறித்து அரசாங்கம் முடிவு செய்யவில்லை
Share Post

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு நகரை மீண்டும் முடக்குவது குறித்து அரசாங்கம் முடிவு செய்யவில்லை என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் (என்ஓசிபிசி) அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தற்போதைய நிலைமை நாளாந்த அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று மாலை நிலவரப்படி, முழு கொழும்பு மாவட்டத்திற்கும் முடக்கல் நிலையை அறிவிக்க வேண்டிய அவசியத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை என்று அவர் கூறினார்.