Home » சட்டம் & அரசியல் » நினைவேந்தல் உரிமையைத் தடுத்துத் தமிழ் மக்களைச் சீண்ட வேண்டாம் : அனுரகுமார திசாநாயக்க

நினைவேந்தல் உரிமையைத் தடுத்துத் தமிழ் மக்களைச் சீண்ட வேண்டாம் : அனுரகுமார திசாநாயக்க

அதைத் தடுத்து நிறுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை.

👤 Sivasankaran19 Nov 2020 12:55 PM GMT
நினைவேந்தல் உரிமையைத் தடுத்துத் தமிழ் மக்களைச் சீண்ட வேண்டாம் : அனுரகுமார திசாநாயக்க
Share Post

போரில் உயிரிழந்தவர்களைப் பொது வெளியில் நினைவேந்துவதற்கு இந்த நாட்டிலுள்ள மூவின மக்களுக்கும் உரிமையுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

அதைத் தடுத்து நிறுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, நினைவேந்தல் உரிமையைத் தடுத்துத் தமிழ் மக்களை மேலும் சீண்ட வேண்டாம் என்று ராஜபக்ச அரசிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

"போரில் உயிரிழந்த தமது உறவுகளை நவம்பர் 27ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவுகூர்வது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் செயற்பாடு என்று இராணுவமோ அல்லது அரசோ தப்புக்கணக்குப் போடக்கூடாது.

நாட்டில் தற்போது கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்திருப்பதால் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடித்து அதற்கேற்ற மாதிரி நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் பங்கேற்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளனர்.