Home » சட்டம் & அரசியல் » ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக மாலா அடிகா நியமனம்

ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக மாலா அடிகா நியமனம்

ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

👤 Sivasankaran21 Nov 2020 7:36 AM GMT
ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக மாலா அடிகா நியமனம்
Share Post

ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜோ பைடனின் ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாலா அடிகா ஜில் பைடனின் மூத்த ஆலோசகராகவும், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் பிரச்சாரத்தின் மூத்த கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.

முன்னதாக, மாலா அடிகா, ஜோ பைடன் அறக்கட்டளையில் உயர் கல்வி மற்றும் இராணுவ குடும்பங்களுக்கான இயக்குநராகவும் இருந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் போது, கல்வி மற்றும் கலாச்சார விவகார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை உதவி செயலாளராக மாலா அடிகா பணியாற்றி உள்ளார்.

உலகளாவிய மகளிர் பிரச்சினைகள் தொடர்பான மாநில அலுவலகத்தின் செயலாளராகவும், தூதரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார்.