Home » சட்டம் & அரசியல் » மருந்து நிறுவனங்கள் மீது டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

மருந்து நிறுவனங்கள் மீது டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு

கோடிக்கணக்கில் செலவு செய்ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

👤 Sivasankaran22 Nov 2020 1:22 PM GMT
மருந்து நிறுவனங்கள் மீது டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
Share Post

நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு டிரம்ப் பேட்டி அளித்தார்.

தனக்கு எதிராக முன்னணி மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

"பெரிய மருந்து நிறுவனங்கள் எனக்கு எதிராக செயல்பட்டுள்ளன. எனக்கு எதிரான விளம்பரங்களுக்காக அவை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. நான்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேன். கிட்டத்தட்ட 7 கோடியே 40 லட்சம் வாக்குகளை நாங்கள் கண்டுபிடிப்போம். எங்களுக்கு எதிராக மருந்து கம்பெனிகள் செயல்பட்டன. ஊடகங்கள் எங்களுக்கு எதிராக இயங்கின. எங்களுக்கு எதிராக நேர்மையற்ற செயல்கள் நிறைய நடந்தன. இதுபோன்று நான் பார்த்ததே இல்லை." என்று அவர் கூறினார்.