Home » சட்டம் & அரசியல் » ஜோ பைடன் பலவீனமான அதிபர்... சீன ஆலோசகர்

ஜோ பைடன் பலவீனமான அதிபர்... சீன ஆலோசகர்

அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது.

👤 Sivasankaran24 Nov 2020 9:18 AM GMT
ஜோ பைடன் பலவீனமான அதிபர்... சீன ஆலோசகர்
Share Post

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கும் பைடன் நிச்சயம் பலவீனமான அதிபராகவே இருப்பார் என சீன அரசின் ஆலோசகர் ஜெங் யோங்னியான் (Zheng Yongnian) கூறி உள்ளார்.

"அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முடிந்துவிட்டன... அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது.

பைடன் வெள்ளை மாளிகையில் நுழைந்த ஜோ பைன்னர் சீனா மீதான பொதுமக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்க சமூகம் சிதைந்துவிட்டது, இதனை சரிசெய்வதறகு ஜோ பைடனால் ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.

பைடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான அதிபராகவே இருப்பார். எனவே, உள்நாட்டு ஜோ பைரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் ராஜதந்திர ரீதியாக ஏதாவது செய்வார். சீனாவுக்கு எதிராகவும் ஏதாவது செய்வார். டிரம்ப் போரில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் ஜனநாயக கட்சியின் அதிபரான பைடன் போர்களைத் தொடங்குவார்." என்று யோங்னியான் கூறினார்.