Home » சட்டம் & அரசியல் » பருத்தித்துறை நீதிமன்றத்தில் மாவீரர் நாள் தடை மனுக்களை மீளபெற்ற காவல்துறையினர்

பருத்தித்துறை நீதிமன்றத்தில் மாவீரர் நாள் தடை மனுக்களை மீளபெற்ற காவல்துறையினர்

வழக்கை மீளப்பெறுவதாக 3 காவல்நிலையப் பொறுப்பதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.

👤 Sivasankaran24 Nov 2020 9:20 AM GMT
பருத்தித்துறை நீதிமன்றத்தில் மாவீரர் நாள் தடை மனுக்களை மீளபெற்ற காவல்துறையினர்
Share Post

மாவீரர் தினத்திற்கு தடைகோரி தாக்கல் செய்த மனுக்களை பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி காவல்துறையினர் மீள பெற்றுக் கொண்டுள்ளனர்.

பதில் நீதிவான் முத்துகுமார் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. நினைவேந்தலிற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் மனு செய்தனர்.

இதன்போது சமர்ப்பணம் செய்த மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா, குற்றவியல் சட்டக்கோவை 106இன் கீழ் இந்த தடை உத்தரவை பெற முடியாது, அதற்கு சட்ட அடிப்படை கிடையாது. பொதுத்தொல்லைகள் கட்டத்தின் கீழ் வேறு விவகாரங்களையே கையாள முடியும், இது நினைவேந்தல் தொடர்புடையது என குறிப்பிட்டதுடன், இதற்கு ஆதாரமாக இலங்கை, இந்திய உயர் நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களை சான்றாக சுட்டிக்காட்டமுடியுமென குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை மீளப்பெறுவதாக 3 காவல்நிலையப் பொறுப்பதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் யாழ் மேல் நீதிமன்றத்தினால் இதேவிவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை கருத்தில் கொண்டு வழக்கை மீளப் பெறுவதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அதனைப் பதிவு செய்த நீதிபதி, 3 வழக்குகளையும் மீளப்பெற உத்தரவிட்டுள்ளார்.