Home » சட்டம் & அரசியல் » சீனச் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

சீனச் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு

தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

👤 Sivasankaran25 Nov 2020 5:57 PM GMT
சீனச் செயலிகளுக்கு இந்தியா தடை ; சீனா கடும் எதிர்ப்பு
Share Post

இந்தியா ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக AliExpress, Alibaba உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

2020 செப்டம்பர் 2 ஆம் தேதி 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது 43 செயலிகளை அணுகுவதற்கு தடை விதித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடுமையாக எதிர்ப்பதாக தெற்காசியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.