Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மெய்நிகர் ஆலோசனைக்கூட்டம்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மெய்நிகர் ஆலோசனைக்கூட்டம்

சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

👤 Sivasankaran25 Nov 2020 6:04 PM GMT
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர மெய்நிகர் ஆலோசனைக்கூட்டம்
Share Post

சிறிலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான 11ஆவது இராஜதந்திர மெய்நிகர் ஆலோசனைக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வெளியுறவு செயலாளர் எட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் லூவோ ஜாவோஹய் (Vice Minister Luo Zhaohui) ஆகியோர் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கியிருந்தனர்.

சிறிலங்காவுக்கும், சீனாவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை மேலும் உயர்த்த பரஸ்பர ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை இரு தரப்பினரும் அடையாளம் கண்டுள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பீய்ஜிங்கில் உள்ள சிறிலங்காத் தூதரகம், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் இருவெளியுறவு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் இந்த மெய்நிகர் கூட்டத்தில் இணைந்திருந்தனர்.