Home » சட்டம் & அரசியல் » பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த முடியாது! - யாழ் நீதிமன்றம் கட்டளை

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த முடியாது! - யாழ் நீதிமன்றம் கட்டளை

உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதியளிக்க முடியாது என்று தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

👤 Sivasankaran25 Nov 2020 6:05 PM GMT
பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த முடியாது! - யாழ் நீதிமன்றம் கட்டளை
Share Post

வழக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்குத் தொடுனரான பொலிஸார் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த பிரதி மன்றாடியார் அதிபதிகள் பிரபாகரன் குமாரரட்ணம், ஹரிப்பிரியா ஜயசுந்தர மற்றும் மூத்த அரச சட்டவாதி ஜனக பண்டார ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதியளிக்க முடியாது என்று தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

போரில் உயிரிழந்த வீரர்கள் உறவுகளை நினைவேந்துவது மரபு என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் சமர்ப்பணம் செய்தனர். இருதரப்பு சமர்ப்பணங்களும் சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கின் கட்டளையை இன்று மாலை 3 மணிக்கு நீதிமன்றம் வழங்கியது.