Home » சட்டம் & அரசியல் » தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசால் தடுக்க முடியாது:தமிழ்க் கட்சிகள்

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசால் தடுக்க முடியாது:தமிழ்க் கட்சிகள்

சி.வி.கே. சிவஞானத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஒன்று கூடினர்.

👤 Sivasankaran26 Nov 2020 11:39 AM GMT
தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசால் தடுக்க முடியாது:தமிழ்க் கட்சிகள்
Share Post

எத்துணைத் தடைக்கட்டளையை அரசாங்கம் விதித்தாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், மாவீரர் நினைவேந்தலை, பொதுமக்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமது இல்லங்களில் மாலை 6.05ற்கு நினைவுகூரத், தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு மாவீரர் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று, வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் ஒன்று கூடினர்.

அப்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.