Home » சட்டம் & அரசியல் » விடுதலைப் புலிகளின் தலைவருக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் கைது!

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் கைது!

கைது செய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் காவல்துறையினர் முன்னெடுத்தனர்.

👤 Sivasankaran27 Nov 2020 2:54 PM GMT
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு முகநூல் ஊடாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்கள் கைது!
Share Post

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் காவல்துறையினர் முன்னெடுத்தனர்.

இன்று மாலை சித்தாண்டி, செங்கலடி, வந்தாறுமுலை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏழு பேர் இந்நடவடிக்கையின் போது ஏறாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்த முக்கிய உறுப்பினர் உட்பட ஏழு பேர் இதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது ஏறாவூர் காவல்நிலையத்தில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.