Home » சட்டம் & அரசியல் » முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல்: சம்பூரில் இளைஞர் கைது

முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல்: சம்பூரில் இளைஞர் கைது

மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை.

👤 Sivasankaran28 Nov 2020 12:06 PM GMT
முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல்: சம்பூரில் இளைஞர் கைது
Share Post

முகநூல் ஊடாக மாவீரர் நினைவேந்தல் பாடல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பகுதியை சேர்ந்த பா.ரதிகரன் (23 வயது) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர் மாவீரர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய முகநூல் ஊடாக மாவீரர்களை நினைவு கூர்ந்து பாடல்களை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை மூதூர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சம்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.