Home » சட்டம் & அரசியல் » முல்லைத்தீவில் இராணுவத்தின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்

முல்லைத்தீவில் இராணுவத்தின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்

மோசமான பாதுகாப்பு கெடுபிடிகள் காணப்பட்டபோதிலும் மக்கள் தமது வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

👤 Sivasankaran28 Nov 2020 12:09 PM GMT
முல்லைத்தீவில் இராணுவத்தின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நாள் நினைவேந்தல்
Share Post

2020 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றையதினம் இராணுவம், பொலிஸார், புலனாய்வாளர்களின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் தமது பிள்ளைகளான மாவீரர்களுக்கு தத்தமது வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது.

மாலை 6.07 மணிக்கு உயிரிழந்த மாவீரர்கள் நினைவாக சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் வீடுகளில் இடம்பெற்றுள்ளது.

ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் ரோந்துகள் , விசேட மோட்டார் சைக்கிள் இராணுவ அணியினரின் ரோந்துகள், காவல்துறையினர் மற்றும் கடற்படை, இராணுவ புலனாய்வு தேசிய புலனாய்வு பிரிவினர்கள் வீதிகள் தோறும் குவிக்கப்பட்டு வீதியால் சென்று வருபவர்களின் விபரங்கள் திரட்டபட்டு மோசமான பாதுகாப்பு கெடுபிடிகள் காணப்பட்டபோதிலும் மக்கள் தமது வீடுகளில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் ஏன் விளக்கேற்றுகின்றீர்கள் என கேட்டு விபரங்களையும் பதிந்து சென்றுள்ளனர்.