Home » சட்டம் & அரசியல் » குற்றம் இழைக்கவில்லை என்றால் ஏன் பன்னாட்டு விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்? கஜேந்திரகுமார் கேள்வி

குற்றம் இழைக்கவில்லை என்றால் ஏன் பன்னாட்டு விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்? கஜேந்திரகுமார் கேள்வி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

👤 Sivasankaran29 Nov 2020 1:11 PM GMT
குற்றம் இழைக்கவில்லை என்றால் ஏன் பன்னாட்டு விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்? கஜேந்திரகுமார் கேள்வி
Share Post

போரில் குற்றம் இழைக்கவில்லை எனில் ஏன் பன்னாட்டு விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்? இறுதிக்கட்டத்தில் போர் வலயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் விடயம் தொடர்பில் இங்கே அமர்ந்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர் பசில் ராஜபக்‌ஷவுடன் தொடர்பில் இருந்தேன். ஆனால் கடைசியில் அந்த மக்களை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்

ஆனால் அந்த மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கூடான பொறுப்புக்கூறலையும், தமிழர்களுக்கான தீர்வைவையும் வலியுறுத்திவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நேற்றைய உரைக்கு பதிலாக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத்வீரசேகர, இன்று சிறிலங்காப் படையினர் குற்றம் எதுவும் இழைக்கவில்லை எனவும் புலிகளே போர்க்குற்றம் புரிந்தனர் எனவும் கூறியிருந்தார்.