Home » சட்டம் & அரசியல் » பிரபாகரனின் நண்பர் பண்டிதனுக்கு சுமந்திரன் அஞ்சலி: சரத் வீரசேகர கேள்வி

பிரபாகரனின் நண்பர் பண்டிதனுக்கு சுமந்திரன் அஞ்சலி: சரத் வீரசேகர கேள்வி

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

👤 Sivasankaran29 Nov 2020 1:31 PM GMT
பிரபாகரனின் நண்பர் பண்டிதனுக்கு சுமந்திரன் அஞ்சலி: சரத் வீரசேகர கேள்வி
Share Post

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிறுவயது நண்பரான பண்டிதனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் எவ்வாறு அஞ்சலி செலுத்த முடியும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

சுமந்திரன் தமது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் கூறிய போதிலும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ததற்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்டித னை யாழ்ப்பாணத்திற்கு சென்று சுமந்திரன் நினைவு கூர்ந்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒரு தாய் தனது இறந்த மகனை நினைவு கூர்வதில் தவறில்லை எனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் நினைவு கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.