Home » சட்டம் & அரசியல் » மட்டக்களப்பில் ஊடகவியலாளர் கைது

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் கைது

முகநூலில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஊடகவியலாளரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

👤 Sivasankaran30 Nov 2020 9:44 AM GMT
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் கைது
Share Post

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த 37 வயதுடைய ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஊடகவியலாளரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மூன்று நாட்கள் தடுத்து வைப்பதற்கான அனுமதியை வாழைச்சேனை காவல்துறையினர் பெற்றுள்ளனர்.

மூன்று நாட்களின் பின்னரே ஊடகவியலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.