Home » சட்டம் & அரசியல் » கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது!

கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது!

மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரை காவல்துறையினர் விடுவித்தனர்.

👤 Sivasankaran30 Nov 2020 9:47 AM GMT
கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது!
Share Post

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

கோப்பாய் காவல்நிலையத்துக்குச் சென்ற வழக்கறிஞர்கள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் இருவரும் மாணவனை விடுவிக்கப் பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.

மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரை காவல்துறையினர் விடுவித்தனர்.

"மாணவன் கைது விடயம் தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இந்துக்களின் நிகழ்வை நடத்த முடியாது தடுத்ததுடன் மாணவனை கைது செய்தமை தவறு என்று சுட்டிகாட்டினேன். மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று இந்துக்களின் கார்த்திகை தீபத்திருநாள் என்று தான் அறிந்திருக்கவில்லை என்றும் மாணவனை உடனடியாக விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்" என்று யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.