Home » சட்டம் & அரசியல் » இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு

இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு

கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும். பேச்சுவார்த்தை மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்.

👤 Sivasankaran1 Dec 2020 11:05 AM GMT
இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஆதரவு
Share Post

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, காணொலி வாயிலாக இன்று கனடாவில் வாழும் சீக்கியர்களுக்கு குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்தியான விவசாயிகளின் போராட்டங்களை அங்கீகரிக்காமல் நான் என் பேச்சை தொடங்கினால் அது பொறுப்பானதாக இருக்காது. அங்குள்ள நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

உரிமைகளைப் பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்குக் கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும். பேச்சுவார்த்தை மீது நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்.

ஆகையால், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெவ்வெறு வழிகளில் இந்திய அரசை தொடர்பு கொண்டு எங்கள் கவலையை வெளிப்படுத்தினோம். என்றார்.