Home » சட்டம் & அரசியல் » அங்குயேலாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழ் பெண்!

அங்குயேலாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழ் பெண்!

அங்குயேலாவின் நிலப்பரப்பு 35 சதுர கிலோமீட்டரைக் கொண்டது.

👤 Sivasankaran1 Dec 2020 11:30 AM GMT
அங்குயேலாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழ் பெண்!
Share Post

கரிபியன் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட தீவான அங்குயேலாவின் புதிய ஆளுநராக இலங்கை வம்சாவளியான தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சட்டத்தரணியாக கடமையாற்றி வரும் திலினி டேனியல் செல்வரட்ணம் என்பவரே 2021 ஜனவரியில் இருந்து அந்த தீவின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

அங்குயேலாவின் நிலப்பரப்பு 35 சதுர கிலோமீட்டரைக் கொண்டது. அங்கு 18 ஆயிரத்து 90 பேர் வசிக்கின்றனர்.