Home » சட்டம் & அரசியல் » அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் பதவி விலகினார்

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் பதவி விலகினார்

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

👤 Sivasankaran2 Dec 2020 3:49 PM GMT
அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் பதவி விலகினார்
Share Post

டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான தனது சிறப்பு ஆலோசகராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணரான ஸ்காட் அட்லாஸ் என்பவரை நியமித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய நடவடிக்கைகளாக கருதப்படும் முகக்கவசம் அணிதல் மற்றும் ஊரடங்கை அமல்படுத்துதல் ஆகியவற்றை ஸ்காட் அட்லாஸ் கடுமையாக எதிர்த்தார்.

இதனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அவர் ஜனாதிபதி டிரம்பை தவறான பாதையில் வழி நடத்துவதாக கண்டனங்கள் வலுத்தன. இதனிடையே அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகரான ஸ்காட் அட்லாஸ் நேற்று தனது பதவியை விட்டு விலகினார். இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ள ஸ்காட் அட்லாஸ் ஜோ பைடன் உருவாக்கியுள்ள புதிய கொரோனா தடுப்பு குழுவுக்குத் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.