Home » சட்டம் & அரசியல் » ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் சுமத்திய விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியது நியூசிலாந்து

ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் சுமத்திய விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியது நியூசிலாந்து

இந்த புகைப்படம் போலியானது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.

👤 Sivasankaran2 Dec 2020 3:55 PM GMT
ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் சுமத்திய விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியது நியூசிலாந்து
Share Post

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று முன்தினம் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதில் ஆஸ்திரேலிய ராணுவ சீருடையில் இருக்கும் ஒரு நபர் குழந்தையின் கழுத்தில் ரத்தக்கரை படிந்த கத்தியை வைத்து இருக்கும் வகையில் அந்த படம் இருந்தது. ஆனால் இந்த புகைப்படம் போலியானது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து நியூசிலாந்து சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறுகையில் "இது உண்மைக்கு மாறான ஒரு படம். அது சரியாக இல்லை. இது போன்ற படங்கள் பயன்படுத்தப்படும் போது எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு நாங்கள் அந்த கவலைகளை எழுப்புவோம். கண்டனத்தை பதிவு செய்வோம். நாங்கள் அதை நேரடியாக செய்வோம்" என கூறினார்.

ஆனால் சீனா இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதோடு, தங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப ஆஸ்திரேலியா முயற்சிப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.