Home » சட்டம் & அரசியல் » பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கில் வாதுரைகளை முன்வைத்த உருத்திரகுமாரன்

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கில் வாதுரைகளை முன்வைத்த உருத்திரகுமாரன்

இவ்ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21ம் தேதி) முன்னராக வழங்கியிருந்தது.

👤 Sivasankaran2 Dec 2020 4:07 PM GMT
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கில் வாதுரைகளை முன்வைத்த உருத்திரகுமாரன்
Share Post

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியினைத் தொடர்ந்து, தீர்வு தொடர்பான தனது அடுத்த கட்ட வாதுரைகளை தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்வைத்துள்ளது.

பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறை அமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என இவ்ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21ம் தேதி) முன்னராக வழங்கியிருந்தது.

இத்தீர்ப்பு தொடர்பில் அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சின் சட்டத்துக்கு முரணான தடை நடவடிக்கை குறித்து, சட்டமுறைப்படி தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்துள்ளது.