Home » சட்டம் & அரசியல் » புதிய ராணுவ அமைச்சரைதேர்வு செய்வதில் ஜோ பைடன் கட்சியில் எதிர்ப்பு

புதிய ராணுவ அமைச்சரைதேர்வு செய்வதில் ஜோ பைடன் கட்சியில் எதிர்ப்பு

இதற்கு அவரது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

👤 Sivasankaran4 Dec 2020 4:58 PM GMT
புதிய ராணுவ அமைச்சரைதேர்வு செய்வதில் ஜோ பைடன் கட்சியில் எதிர்ப்பு
Share Post

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக அடுத்த மாதம் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் புதிய ராணுவ மந்திரியாக, அந்த துறையின் முன்னாள் துணை அமைச்சரான மிச்செலி புளூர்னாய் என்ற பெண் தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார். ஆனால் இதற்கு அவரது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவரையே புதிய ராணுவ அமைச்சராக தேர்வு செய்ய வேண்டும் என்று கருப்பின தலைவர்கள், ஜோ பைடனுக்கு அழுத்தம் தந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மிச்செலி புளூர்னாயின் கடந்த கால வரலாறு, தனியார் துறையுடனான அவரது தொடர்புகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக 7 முற்போக்கு குழுக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.